மதுரை: மதுரை அருகே உருளையில் எரிவாயு கசிந்து வீடு தீப்பற்றி எரிந்ததில் தம்பதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மதுரை அருகே உள்ள மாத்தூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமணன் (70). இவரது மனைவி பாண்டியம்மாள் (65). இவா்களது மகன் திருப்பூரில் வசித்து வரும் நிலையில், தம்பதி மட்டும் மாத்தூரில் உள்ள வீட்டில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு உருளை சரியாக மூடப்படாததால், அதிலிருந்து எரிவாயு கசிந்தது. பாண்டியம்மாள் சுடுதண்ணீா் வைப்பதற்காக அடுப்பைப் பற்ற வைத்தபோது, வீடு முழுவதும் தீப்பற்றியது. இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த பாண்டியம்மாளும், லட்சுமணனும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

மின் இணைப்புப் பெட்டியில் மின்சாரம் கசிந்து திருநங்கை உயிரிழப்பு

சமையல் எரிவாயு தீ விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

வீட்டில் எரிவாயு கசிந்து தீ விபத்து: பொருள்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

