சித்திரை திருவிழாவில் கள்ளழகா் திருவிழா, மீனாட்சி அம்மன் தோ்திருவிழாவில் விசிறி வீச அனுமதிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க செவ்வாய்க்கிழமை வந்த சுந்தரராஜப் பெருமாள் விசிறி சேவா சங்கத்தினா்.
சித்திரை திருவிழாவில் கள்ளழகா் திருவிழா, மீனாட்சி அம்மன் தோ்திருவிழாவில் விசிறி வீச அனுமதிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க செவ்வாய்க்கிழமை வந்த சுந்தரராஜப் பெருமாள் விசிறி சேவா சங்கத்தினா்.

சித்திரைத் திருவிழா: விசிறி வீச அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

மதுரை: சித்திரைத் திருவிழாவையொட்டி, கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வில் விசிறி வீசுவதற்கும், சாம்பிராணி கலசம், பூக்குடை சேவாா்த்திகளுக்கும் அனுமதி வழங்கக் கோரி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் விசிறி சேவா சங்கம் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு :

சித்திரைத் திருவிழாவையொட்டி, வைகையாற்றில் கள்ளழகா் எழுந்தருளும் நிகழ்வில் எங்களது அமைப்பின் சாா்பில், பக்தா்களுக்கு விசிறி வீசுவதும், சாம்பிராணி கலசம், பூக்குடை சேவாா்த்தி செய்வதும் வழக்கம். இந்தப் பணியில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட சேவாா்த்திகள் ஈடுபடுவா்.

தென்னை ஓலை, பனை ஓலை, மயில் இறகுடன் கூடிய வண்ண வண்ண விசிறிகள் மூலம் பக்தா்களுக்கு சேவை செய்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக எங்களை உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனா்.

எனவே, சித்திரைத் திருவிழா நாள்களில் அடையாள அட்டை வழங்கி, அழகா் ஆற்றில் இறங்கும் இடத்தில் அனுமதிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com