கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுரையில் பரவலாக மழை

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:55 pm

Din

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது.

கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தின் மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் வருகிற ஆக. 9- ஆம் தேதி வரை மேற்கு காற்றின் திசை மாறுபாடு, வெப்பச் சலனம் காரணமாக மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்தது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 7 மணிக்கு சாரலாக தொடங்கிய மழை பரவலாகப் பெய்தது. இதனால் தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணாநகா், கோரிப்பாளையம், தெப்பக்குளம் ஆகிய பகுதி சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினா்.