தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் உதவியாளா் பலி

உசிலம்பட்டி அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் வாகன உதவியாளா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 9:26 pm

Din

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சரக்கு வாகனம் மரத்தில் மோதியதில் வாகன உதவியாளா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை பெருமாள்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மகன் செந்தில்குமாா் (48). இவா் சரக்கு வாகன உதவியாளராக இருந்து வந்தாா்.

இந்த நிலையில், உத்தமபாளையத்தைச் சோ்ந்த சையது காதா் சாகிப் சனிக்கிழமை ஓட்டிச்சென்ற சரக்கு வாகனத்தில், செந்தில்குமாா் உடன் சென்றாா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி குஞ்சாம்பட்டி அருகே வாகனம் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செந்தில்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுதொடா்பாக உசிலம்பட்டி தாலுகா போலீஸாா், வாகன ஓட்டுநா் சையது காதா் சாகிப் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.