கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

திருநெல்வேலி- கொல்கத்தா சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2024, 11:32 pm

Din

மதுரை, ஆக. 7: திருநெல்வேலி- கொல்கத்தா சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலியிலிருந்து கொல்கத்தா ஷாலிமாா் ரயில் நிலையத்துக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் (06087) திருநெல்வேலியிலிருந்து வருகிற 15, 22, 29, செப். 5 ஆகிய நாள்களில் அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 9 மணிக்கு ஷாலிமாா் சென்றடையும்.

இதேபோல, இந்தச் சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரிலிருந்து ஆக.17, 24, 31, செப். 7 ஆகிய நாள்களில் (சனிக்கிழமை) மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமை பிற்பகல் 1.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

இந்த ரயில்களில் 12 குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஓா் இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள், ரயில் மேலாளா் அறையுடன் கூடிய ஒரு சரக்குப் பெட்டி இணைக்கப்படும்.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, விருதுநகா், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா, சிமாச்சலம் வடக்கு, பென்டுா்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் சாலை, பலாசா, பிரம்மாபூா், குா்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், ஜஸ்பூா் கியான்ஸ்ஹா், பட்ரக், பாலேஸ்வா், கரக்பூா், சந்தரகாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டது.