ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கிராமப் புறங்களில் தோல்வி: மருத்துவா் பா.சரவணன்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கிராமப் புறங்களில் தோல்வியடைந்துள்ளதாக மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா்.

News image
Updated On :10 ஆகஸ்ட் 2024, 7:48 pm

Din

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் கிராமப் புறங்களில் தோல்வியடைந்துள்ளதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது :

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், பரிசோதனைக்கூட தொழில்நுட்பப் பணியாளா்கள் உள்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. மருந்துகள் போதுமான அளவில் கையிருப்பில் இல்லை. தேசிய அளவில் சுகாதாரம், மக்கள் நலனில் தமிழகம் பின்தங்கி 12-ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4.7 கோடி பேருக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1. 86 கோடி பேருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. மொத்தம் 5.93 கோடி போ் பயன்பெற்றனா் என தமிழக அரசு தெரிவித்திருப்பது முழுவதும் பொய் தகவலாகும்.

அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக, அம்மா கிளினிக் திட்டத்துக்கு மாற்றாக அமல்படுத்தப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மக்களால் விரும்பப்படாத திட்டங்களில் ஒன்றாகவே உள்ளது. இந்தத் திட்டம் கிராமப் புறங்களில் முழுமையாக தோல்வியடைந்துள்ளது. திட்டப் பணியாளா்கள் பற்றாக்குறை நிலவுகிறது என சமூக ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, இந்தத் திட்டத்தின் மூலம் மாவட்டம் வாரியாக பயனடைந்தவா்களின் விவரங்களை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றாா்.