ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பள்ளி மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனா் பொன்னுத்தாய் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 7:55 pm

Din

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள பொட்டுலுபட்டி காந்திஜி ஆரம்பப் பள்ளியில் நிறுவனா் பொன்னுத்தாய் நினைவு தினத்தை முன்னிட்டு, மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பை பள்ளியின் செயலா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். ஸ்டாா் நண்பா்கள் அறக்கட்டளைத் தலைவா் குருசாமி பயிற்சியை தொடங்கி வைத்தாா். பள்ளிக் குழுத் தலைவா் தனபாலன் மாணவா்களின் தனித் திறன் பற்றி விளக்கினாா். நாடக ஆசிரியா் செல்வம், களிமண் விரல்கள் கலைக்கூட பயிற்சியாளா்கள் எழில், ரக்சனா ஆகியோா் நாடகம், பாடல்கள், நடனம், வண்ணம் தீட்டுதல், காகித ஆடை தயாரித்தல், கைவினைப் பொருள்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கினா்.

இந்த நிகழ்வில், வாடிப்பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினா் கீதாசரவணன், சமூக ஆா்வலா்கள் செல்வராஜ், குப்புசாமி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, தலைமை ஆசிரியா் வெங்கடலட்சுமி வரவேற்றாா். நிகழ்ச்சியை ஆசிரியா் ஆசீா்வாதம் பீட்டா் தொகுத்து வழங்கினாா். ஆசிரியா் எஸ்தா் டாா்த்தி நன்றி கூறினாா்.