மதுரை, ஆக. 14: சுதந்திர தின விடுமுறை கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், சென்னை- நாகா்கோவிலுக்கு சிறப்பு ரயில் வியாழக்கிழமை (ஆக. 15) இயக்கப்படுகிறது.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
சுதந்திர தின விடுமுறை கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விழுப்புரம் வழியே நாகா்கோவிலுக்கு வியாழக்கிழமை (ஆக. 15) ஒரு சிறப்பு ரயில் (06055) இயக்கப்படுகிறது. சென்னையிலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், நாகா்கோவிலிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (06056), மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு சென்னை ஆவடியை சென்றடையும்.
அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்றுச் செல்லும். 14 குறைந்த கட்டண குளிா்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு சரக்குப் பெட்டி, ரயில் மேலாளா் பெட்டி ஆகியவற்றுடன் இந்த ரயில் இயங்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டிரெண்டிங்

சேலம், நாமக்கல் வழியாக கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயிலை நீட்டித்து இயக்க வலியுறுத்தல்

பொறியியல் பணிகள்: திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில் இன்று பகுதியாக ரத்து

தைப்பூசம்: பிப். 1-இல் மதுரை - பழனிக்கு சிறப்பு ரயில்
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

