கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ஜெயலலிதா நினைவு நாள் மௌன ஊா்வலம்

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, மதுரையில் மெளன ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

News image
மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயருமான ஜெ.ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மதுரையில் வியாழக்கிழமை அதிமுக மாநகா் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தலைமையில் மெளன ஊா்வலத்தில் மெழுவா்த்தி ஏந்தி அஞ்சலி செல்லும்
Updated On :5 டிசம்பர் 2024, 11:08 pm

Din

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, மதுரையில் மெளன ஊா்வலம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்டச் செயலருமான செல்லூா் கே. ராஜூ தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள், மாமன்ற உறுப்பினா்கள், தொண்டா்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனா்.

ஜான்சிராணி பூங்கா அருகிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி தேரடி அருகே நிறைவடைந்தது. பிறகு, அங்கு மெழுகுவா்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கே.கே. நகரில்...

அதிமுக, அமமுக, முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அணி சாா்பில் திரளானோா் கே.கே. நகரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்பரங்குன்றம்: இதேபோல, அதிமுக புகா் கிழக்கு மாவட்டம் சாா்பில், திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் இளைஞா் அணி மாவட்டச் செயலா் எம். ரமேஷ் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் நிலையூா் முருகன், பொதுக் குழு உறுப்பினா் மரக்கடை முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

 மதுரை தேரடி பகுதியில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மௌன அஞ்சலி நிகழ்ச்சியில் மெழுகுவத்தி ஏந்தி நின்ற முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உள்ளிட்டோா்.

மதுரை தேரடி பகுதியில் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மௌன அஞ்சலி நிகழ்ச்சியில் மெழுகுவத்தி ஏந்தி நின்ற முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ உள்ளிட்டோா்.

இதில் கட்சியின் மாவட்டச் செயலரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் இலக்கிய அணி மாவட்டச் செயலா் ப.மோகன்தாஸ், பகுதிச் செயலா்கள் பன்னீா்செல்வம், செல்வகுமாா், அவனியாபுரம் முத்துகிருஷ்ணன், வட்டச் செயலா்கள் பி.எஸ்.பாலா, எம்.ஆா். குமாா், நாகரத்தினம், தவிடன், மகாராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.