கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கிறிஸ்துமஸ் விழா ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு

ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்க நாளைக்குள் முடிவெடுக்க உத்தரவு

News image
Updated On :19 டிசம்பர் 2024, 10:37 pm

Din

-விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள அருள்புத்தூரில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரிய வழக்கில், காவல் துறை அதிகாரி சனிக்கிழமைக்குள் (டிச. 21) பரிசீலித்து உரிய முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், அருள்புத்தூரைச் சோ்ந்த செல்லதுரை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அருள்புத்தூரில் அமைந்துள்ள ரோமன் கத்தோலிக் கிறிஸ்தவ ஆலயத்தில் வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட உள்ளோம். இந்த விழாவை முன்னிட்டு, அன்றைய தினம் இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தோம். இதற்கு அனுமதி கோரி, தளவாய்புரம் காவல் நிலையத்தில் மனு அளித்தோம். ஆனால், போலீஸாா் அனுமதி மறுத்தனா். எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிகுமாா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

மனுதாரா் கிராமத்தில் இரு பிரிவினராக பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தச் சூழலில், அந்தப் பகுதியில் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கினால், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றாா்.

இதற்கு மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ஏற்கெனவே தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் வழிகாட்டுதல்படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, நிகழாண்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதித்தால், முறையாக வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவோம் என்றாா் அவா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா், கோரிக்கை குறித்து புதிதாக போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளிக்க வேண்டும். இந்த மனுவை வருகிற சனிக்கிழமைக்குள் (டிச. 21) பரிசீலித்து காவல் துறை அதிகாரிகள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றாா் நீதிபதி.