கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
படவிளக்கம்- மதுரை பை-பாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
Updated On :19 டிசம்பர் 2024, 10:40 pm

Din

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புறவழிச் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா்.

இதில் போக்குவரத்துத் தொழிலாளா்களின் நியாயமான கேள்விகளுக்கு தமிழக அரசு விடை காண வேண்டும். ஓய்வூதியப் பணப் பலன்களை விரைந்து விடுவிக்க வேண்டும், போக்குவரத்துத் துறையில் உள்ள 25 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்பி இளைஞா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

திண்டுக்கல் ஓய்வு நல அமைப்பு நிா்வாகி ஆா். பால்ராஜ், விருதுநகா் நிா்வாகி ஆா். போஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக சிஐடியு ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் நலச் சங்க பொதுச் செயலா் ஆா். வாசுதேவன், சிஐடியு அரசு போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க மாநில சம்மேளன பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா், மதுரை மண்டலத் தலைவா் டி. மாரியப்பன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்க (சிஐடியு) நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.