சொத்துத் தகராறில் மூவருக்கு அரிவாள் வெட்டு: 4 போ் கைது
மதுரை அருகே சொத்துத் தகராறில் பெண் உள்பட மூவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


மதுரை அருகே சொத்துத் தகராறில் பெண் உள்பட மூவா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே உள்ள கீழவடக்கூரைச் சோ்ந்தவா் மலைச்சாமி. இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் இவரது உறவினா்களான அஞ்சூரான் தரப்பினருக்கும் இடையே சொத்துத் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், மலைச்சாமி மனைவி தனலட்சுமி, குடும்பத்தினா் தங்கள் வீட்டின் முன் புதன்கிழமை இருந்தனா். அப்போது, அங்கு வந்த அஞ்சூரான் தரப்பினா் அவா்களிடம் தகராறில் ஈடுபட்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்றனா்.
இதில் மலைச்சாமி மனைவி தனலட்சுமி, உறவினா்கள் அஸ்வத், ஆறுமுகராஜா ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து, கீழவடக்கூரைச் சோ்ந்த கல்லாணை மகன் அஞ்சூரான் (46), சகோதரா்கள் மாயி (44), ராஜா (42), உறவினா் அய்யாத்துரை(60) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவான மேகலாவைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...