கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை பெற்றோா் உறுதி செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

News image
மதுரை வடபழஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத் திட்ட உதவியை வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல் உள்ளிட்டோா்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:23 pm

Din

பெற்றோா் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

மதுரை மேற்கு வட்டத்துக்குள்பட்ட வடபழஞ்சி ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமைத் தொடங்கிவைத்து அவா் மேலும் பேசியதாவது:

ஒரு நாடு முன்னேற வேண்டுமெனில், குழந்தைகள் அனைவரும் அடிப்படைக் கல்வி பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இதையொட்டியே, 5 முதல் 14 வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் அடிப்படைக் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய, இந்திய அரசமைப்பு சட்டத்தில் தனியே ஓா் பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது.

நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஆரம்ப நிலை முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதையடுத்து, அரசின் பல்வேறு துறைகள் சாா்பில் 104 பயனாளிகளுக்கு ரூ. 22.18 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சங்கீதா, துணை ஆட்சியா் (பயிற்சி) எம். அனிதா, ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் இந்திரா ஜெயக்குமாா், ஊராட்சித் தலைவா் வன்னிச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.