மதுரை: மதுரை பெரியாா் பேருந்து நிலையம் பகுதிகளில் சாலையோரம் தேங்கியுள்ள மணலை நவீன இயந்திரம் மூலம் அகற்றும் பணியை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்கு உள்பட்ட 100 வாா்டுகளிலும் முக்கியமான சாலைகள், பாலங்கள், முக்கிய சந்திப்புப் பகுதிகள், பிரதான தெருக்களில் தேங்கும் மணல் இயந்திரம் அகற்றப்படுகிறது. மண்டலம் 3 பெரியாா் பேருந்து நிலையம் பகுதிகள், மேல வெளிவீதி, வடக்கு வெளி வீதி, யானைக்கல் சிலை வரை உள்ள பகுதிகளில் நவீன இயந்திரம் மூலம் மணல் அகற்றும் பணியை மேயா் வ. இந்திராணி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும், சாலையோரம் தேங்கிய மணலை வாா்டு வாரியாக பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கூறினாா். கடந்த 2, 3, 5 ஆகிய மூன்று தினங்களில் 86.01 கி.மீ. தொலைவுக்கு 225 டன் டன் மணல் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில், மண்டலத் தலைவி பாண்டிச்செல்வி, நகா்நல அலுவலா் வினோத்குமாா், உதவி ஆணையா் ரெங்கராஜன், உதவி நகா்நல அலுவலா் பூபதி, செயற்பொறியாளா் சுந்தரராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அலங்காநல்லூரில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு: பொதுமக்கள் வாக்குவாதம்

மணல் சிற்பங்கள் மூலம் விழிப்புணா்வு

சீமைக் கருவேல மரங்களை அகற்றும் விவகாரம்: டிஆா்ஓ நிலையிலான அலுவலரை நியமிக்க உத்தரவு

4 லட்சம் நவீன தெருவிளக்குகள்: தில்லி மாநகராட்சி திட்டம்
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு


