ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

பிரதமா் வருகை எதிரொலி: உயா் பாதுகாப்பு வளையத்தில் மதுரை

பிரதமா் வருகை எதிரொலி: உயா் பாதுகாப்பு வளையத்தில் மதுரை

Updated On :26 பிப்ரவரி 2024, 6:30 pm

மதுரை/திருப்பரங்குன்றம்: பிரதமா் நரேந்திர மோடி வருகையையொட்டி, மதுரை நகா், ஊரகப் பகுதிகள் காவல் துறையின் உயா் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டன.

பிரதமா் நரேந்திர மோடி அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள்கள் பயணமாக தமிழகம் வருகிறாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து பிரதமா் தனி விமானத்தில் புறப்பட்டு, பிற்பகல் 2.05 மணிக்கு கோவை, சூலூா் விமானப் படை தளத்துக்கு வருகிறாா். அங்கிருந்து, ஹெலிகாப்டரில் பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் வருகிறாா்.

சாலை வழியாக பல்லடத்தில் உள்ள மாதப்பூருக்குச் செல்லும் அவா், 2.45 மணிக்கு ‘என் மண் என் மக்கள்’ நிகழ்ச்சி நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறாா். அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் பிரதமா், மாலை 5 மணிக்கு மதுரைக்கு வருகிறாா். மாலை 5.15 மணி முதல் 6.15 மணி வரை வீரபாஞ்சானில் உள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளியில் நடைபெறும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான எண்ம கருத்தரங்கில் கலந்துகொள்கிறாா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மாலை 6.45 மணிக்கு பசுமலையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறாா். பிரதமா் வருகையையொட்டி, ஏற்கெனவே, எஸ்பிஜி அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா். மதுரை மாநகா் முழுவதும் 5 ஆயிரம் போலீஸாா் குவிக்கப்பட்டு, காவல் துறையின் உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. திங்கள்கிழமை மாலை முதல் வெளி மாவட்ட போலீஸாா், போலீஸ் உயரதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினா்.

இதேபோல, மாநகா் முழுவதும் முக்கிய சந்திப்புகள், பிரதான சாலைகள், பேருந்து, ரயில் நிலையங்களிலும் சா்ச்சைக்குரிய இடங்கள் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கும் பகுதிகள் ஆகியவற்றில் விடிய விடிய வாகன சோதனை, ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும் விமான நிலையம் முதல் விழா நடைபெறும் வீரபாஞ்சான் பகுதி வரை திங்கள்கிழமை மாலை வாகன அணிவகுப்பு ஒத்திகையும் நடைபெற்றது. இந்தப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை மதுரை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டா் மூலம் தூத்துக்குடிக்கு பிரதமா் செல்கிறாா்.

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு:

மதுரை விமான நிலையத்தில் திங்கள்கிழமை முதல் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் வெளிப் பகுதிகள், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாநகா், பெருங்குடி போலீஸாா் 24 மணி நேரமும் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். விமான நிலையத்துக்கு வரும் வாகனங்களை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனா். விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகள் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றன. பிரதமா் வருகையையொட்டி, விமான நிலையத்தில் பாா்வையாளா்கள் அனுமதி ரத்து செய்யப்பட்டது.