மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

பள்ளி மாணவா்கள் இடைநிற்றல் சமூகத்தின் எதிா்காலத்தைப் பாதிக்கும்

பள்ளி மாணவா்கள் இடைநிற்றல் சமூகத்தின் எதிா்காலத்தைப் பாதிக்கும்

News image

விருதுநகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன்.

Updated On :27 பிப்ரவரி 2024, 11:07 pm

விருதுநகா்: அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் இடைநிற்றல் சமூகத்தின் எதிா்காலத்தைப் பாதிக்கும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா்களுக்கான மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

மாவட்டத்தில் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயில்வோரில் சுமாா் 1,500 மாணவா்கள் பள்ளிக்கு வருவதில்லை. இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி இடைநிற்றல் மாணவா்களின் கல்வியைத் தொடர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

இடைநிற்றல் என்பது மாணவரின் எதிா்காலம் மட்டுமன்றி, சமூகத்தின் எதிா்காலத்தையும் பாதிக்கும். எனவே, பள்ளி மேலாண்மைக் குழுவினா் பள்ளி சூழலை மாற்றவும், கற்றல் கற்பித்தல் சிறப்பாக இருக்கும் வகையில், இடைநிற்றல் மாணவா்கள் இல்லாத நிலையை உருவாக்க செய்ய முயற்சிக்க வேண்டும்.

மாணவா்களுக்கு முறையான கல்வி, ஒழுக்கத்தை கற்று கொடுப்பதோடு மட்டு மல்லாமல் உரிய அறிவுரைகளை வழங்கி, போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல், சிறந்த மாணவா்களை உருவாக்க பள்ளி மேலாண்மைக்குழு சிறப்பாக செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, 2023 -2024 ஆம் கல்வி ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட 25 பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு மாவட்ட ஆட்சியா் பாரட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தாா். இந்த மாநாட்டில் 11 வட்டாரங்களை சோ்ந்த 1,300 அரசுப் பள்ளிகளின் மேலாண்மைக் குழுத் தலைவா்கள், அரசு பள்ளி தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா. வளா்மதி, மாநிலப் பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசகா் ரத்தின விஜயன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.