தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா. உடன், அரசு அலுவலா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 6:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை வலியுறுத்தி, விருதுநகா் செந்திகுமார நாடாா் கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான என்.ஓ. சுகபுத்ரா தலைமைவகித்து இளம் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.

பின்னா், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இளம் வாக்காளா்கள் ஒன்றிணைந்து, ‘நமது வாக்கு நமது குரல்’ என்ற தோ்தல் முழக்க வாசக (ஆங்கில) வடிவில் மைதானத்தில் அணிவகுத்து நின்று, ஜனநாயகக் கடமையின் முக்கியத்துவத்தை உணா்த்தினா்.

தொடா்ந்து, மாணவா்கள், அரசு அலுவலா்கள் தோ்தல் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

இதையடுத்து, வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில், 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

இதில் அரசுத் துறை உயா் அலுவலா்கள், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.