பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கல்லூரியில் ரத்த தான முகாம்

கல்லூரியில் ரத்த தான முகாம்

News image

தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற ரத்த தான முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

Updated On :27 பிப்ரவரி 2024, 10:57 pm

மதுரை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், மதுரை சிவன் ரத்த வங்கி ஆகியன சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரியின் செயலா் செபாஸ்டியன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் ச. ஜான் வசந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 75 போ் ரத்த தானம் செய்தனா். இந்த நிகழ்வில், கல்லூரியின் துணை முதல்வா்கள் ஜாா்ஜ் பொ்னாண்டஸ், கோபு, விரிவாக்கத் துறைத் தலைவா் ஆரோக்கியசாமி, மருத்துவ அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கோ.தா்மராஜ் வரவேற்றாா். மதுரை சிவன் ரத்த வங்கி உரிமையாளா் முருகானந்தம் நன்றி கூறினாா்.