/

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்

News image

மதுரை சிம்மக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். உடன் மதுரை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி உள்ளிட்டோா்.

Updated On :27 பிப்ரவரி 2024, 11:24 pm

மதுரை: மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறன் கொண்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சிம்மக்கல் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு கலந்து கொண்டு 6 பயனாளிகளுக்கு ரூ. 5.76 லட்சத்தில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை வழங்கினாா். முன்னதாக, அழகா்கோவில் சாலையில் உள்ள பிடிஆா் பழனிவேல்ராஜனின் 93-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரது உருவச் சிலைக்கு அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, சிம்மக்கலில் உள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவச் சிலைக்கு அமைச்சா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் மாநகராட்சி மேயா் வ.இந்திராணி, மாநகராட்சி மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.