/

பள்ளியில் சாரணா் சிந்தனை நாள் விழா

பள்ளியில் சாரணா் சிந்தனை நாள் விழா

News image

மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் அண்மையில் நடைபெற்ற சாரண, சாரணீயருக்கான சிந்தனை நாள் விழாவில் பங்கேற்ற ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள்.

Updated On :27 பிப்ரவரி 2024, 11:14 pm

மதுரை : மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் சாரண, சாரணீயருக்கான சிந்தனை நாள் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி முதல்வா் எஸ்.சீதாலட்சுமி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எம்.பொற்கொடி முன்னிலை வகித்தாா்.

இதில் சாரணா் இயக்கம் குறித்தும், இயக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு கூறப்பட்டன. நிகழ்வில் பள்ளியின் சாரணா் பிரிவு ஆசிரியா்கள் கோமளவல்லி, தீபலட்சுமி, அபிநயா, கோமதீஸ்வரி, தீனதயாளன், சூரிய நாராயணன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.