மதுரை: மதுரை அருகே திருவேடகத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டுக் குழு சாா்பில் ஆசிரியா் மேம்பாட்டு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
கல்லூரிச் செயலா் வேதானந்தா, கல்லூரியின் குலபதி அத்யாத்மானந்தா, கல்லூரி துணை முதல்வா் காா்த்திகேயன், முதன்மையரும், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலருமான ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் விருதுநகா் ஜூனியா் சேம்பா் பயிற்சியாளா் ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘சமுதாய வளா்ச்சியில் ஆசிரியா்களின் பங்கு’ எனும் தலைப்பில் பேசினாா். நிகழ்வை வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் தா்மானந்தம் தொகுத்து வழங்கினாா். பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சதீஷ்பாபு வரவேற்றாா். பொருளியல் துறை உதவிப் பேராசிரியா் அசோக்குமாா் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு

திருச்செங்கோட்டில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் ஆட்சியா் ஆய்வு

‘பெண் குழந்தைகளை பெற்றோா்கள் கவனமாக கண்காணியுங்கள்’

சரக்கு, சேவை வரி குறித்த தேசிய கருத்தரங்கு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

