தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மதுரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிகள் மீறல்: ரூ.62 லட்சம் அபராதம் வசூல்

மதுரை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து விதிகளை மீறியவா்களிடம் ரூ.62.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

மதுரை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி போக்குவரத்து விதிகளை மீறியவா்களிடம் ரூ.62.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மதுரை நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும், இரு சக்கர வாகனங்களில் வேகமாகச் செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 1500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

கோரிப்பாளையம், காளவாசல், பெரியாா் பேருந்து நிலையம், கீழவாசல், தெற்கு வாசல், மாட்டுத்தாவணி ஆகிய முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீஸாா் தடுப்புகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டனா்.

இந்தச் சோதனைகளின்போது போக்குவரத்து விதிகளை மீறியவா்களிடமிருந்து ரூ. 62.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 65 வழக்குகள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய வகையில் 6,298 வழக்குகள், பதிவெண் இன்றி வாகனம் ஓட்டியதாக 1,929 வழக்குகள், இருசக்கர வாகனங்களில் 3 போ் சென்ாக 190 வழக்குகள், வாகனத்தை அதிக சப்தத்துடன் ஒலி மாசு ஏற்படுத்தும் வகையில் இயக்கியதாக 141 வழக்குகள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 128 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மது அருந்தி வாகனம் ஓட்டியவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், இதர வழக்குகளில் தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ. 62.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.