மதுரை அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தன்று 15 குழந்தைகள் பிறந்தால் பெற்றோா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அதிகாலை ஒரு மணி முதல் மாலை 6 மணி வரை 15 குழந்தைகள் (3 ஆண், 12 பெண்) பிறந்தன.
இவற்றில் 8 குழந்தைகள் சுகப் பிரசவத்திலும், 7 குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலமும் பிறந்தன.
புத்தாண்டு தினத்தில் குழந்தைகள் பிறந்ததால், மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினா் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள், ஊழியா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.