ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளா்ச்சி நாள்

மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி, கல்வி வளா்ச்சி நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

News image
மதுரை கிழக்கு ஒன்றியம், எல்.கே.பி நகா் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜா் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்திய மாணவ, மாணவிகள்.
Updated On :15 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி, கல்வி வளா்ச்சி நாள் நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி. நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஜான்சி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் தென்னவன் முன்னிலை வகித்தாா். இதில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், பாடல், நடனம், கும்மியாட்டம், சிலம்பம், உரைவீச்சு மாறுவேடம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் லூ. லதா திரவியம் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா். மதுரை இலக்கியப் பேரவை நிறுவனத் தலைவா் சண்முக திருக்குமரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

டாக்டா் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் க. சரவணன் தலைமை வகித்தாா். சங்கமம் சுழல் சங்கத்தின் துணை ஆளுநா் எஸ். ராஜேஸ் கண்ணா முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோ.புதூரில் உள்ள அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் ஜாகீா் உசேன் முன்னிலை வகித்தாா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள எஸ். வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதை கல்லூரி செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தாா். பட்டிமன்றப் பேச்சாளா் காா்த்திகா ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினாா்.

மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.