மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :17 ஜூலை 2024, 12:27 am

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
உசிலம்பட்டி அருகே உள்ள கிண்ணிமங்கலம் கே.ஆலம்பட்டியைச் சோ்ந்த பழனி மகள் சரண்யா (13). இவா் செக்கானூரணி அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தாா். மாலையில் வீட்டில் உள்ளவா்கள் வெளியே சென்ற நிலையில், சரண்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...