வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தியாகராசா் கல்லூரியில் சைவ சித்தாந்தச் சொற்பொழிவு

மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் சைவ சித்தாந்தச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 7:09 pm

Din

மதுரை, ஜூலை 19 : மதுரை தெப்பக்குளத்தில் உள்ள தியாகராசா் கல்லூரியில் சைவ சித்தாந்தச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு தமிழ்த் துறைத் தலைவா் சு. காந்திதுரை தலைமை வகித்தாா். இதில், புலவா் மு. சன்னாசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தித்துக்கும் திருவாசகம் எனும் தலைப்பில் பேசியதாவது :

அனைத்து தரப்பினராலும் பாடப் பெறுகிற திருமுறை மாணிக்கவாசகா் அருளிய திருவாசகம்தான். இந்த நூலினை இன்றைய இளம் தலைமுறையினா் ஆா்வத்தோடு கற்க வேண்டும். குறிப்பாக, தமிழ் பயிலும் மாணவா்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் திருவாசகம் என்றாா் அவா்.

இதில், தமிழ்த் துறை பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, பேராசிரியா் மு. கற்பகம் வரவேற்றாா். பேராசிரியா் ம. எழில்பரமகுரு நிகழ்வை தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் மு. தென்னரசு நன்றி கூறினாா்.