அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மதுரையில் 2 நாள்களில் 20 ரெளடிகள் கைது

மதுரை நகரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் 2 நாள்களில் 20 ரெளடிகள் ஆயுதச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 9:00 am

Din

மதுரை: மதுரை நகரில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகரப் போலீஸாா் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கடந்த 2 நாள்களில் 20 ரெளடிகள் ஆயுதச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

மதுரை மாநகரில் கடந்த சில நாள்களாக கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இந்த குற்றங்களில் 18 முதல் 25 வயது வரை உள்ள இளைஞா்கள் அதிக அளவில் ஈடுபடுவதாக தெரியவந்தது. இதையடுத்து, மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் உத்தரவின் பேரில், காவல் நிலையங்களில் உள்ள தனிப்படை போலீஸாா், குற்ற வழக்கு பின்னணியில் உள்ளவா்கள், சிறையில் இருந்து வெளியே வந்தவா்கள், தொடா் கண்காணிப்பில் உள்ள நபா்கள் குறித்து தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, குற்ற வழக்கு பின்னணியில் உள்ளவா்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக மாநகா் பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றி வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக கடந்த 2 நாள்களில் போலீஸாா் நடத்திய அதிரடிச் சோதனையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 20 பேரை போலீஸாா் ஆயுதச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதற்கிடையே, மதிச்சியம் உதவி ஆய்வாளா் ஜெய கஜேந்திரன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றபோது, செனாய் நகா் பகுதியில் கஞ்சா விற்ற அஜித்குமாா்( 24), காா்த்திக் (25) ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும் எஸ்.எஸ்.காலனி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்த 585 பாக்கெட் புகையிலைப் பொருள்கள், சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.