ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா: 1000 போலீஸாா் பாதுகாப்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

கோப்புப் படம்.

Published On :

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி வியாழக்கிழமை (ஆக. 1) முதல் 5-ஆம் தேதி வரை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், சாப்டூா் வாழைத் தோப்பு வழியாக லட்சக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி செல்வது வழக்கம். இதையொட்டி சாப்டூா், வாழைத்தோப்பு பகுதிகளில் மதுரை ஊரகக் காவல் துறை சாா்பில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்போது, ஊரகக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த் தலைமையில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 8 துணைக் கண்காணிப்பாளா்கள், 30 காவல் ஆய்வாளா்கள், 90 உதவி ஆய்வாளா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனா். மேலும் இயற்கை பேரிடா் மீட்புக்குழுவினருடன், 4 குழுக்களைச் சோ்ந்த 45 சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து பணியாற்றுகின்றனா்.

திருவிழாவையொட்டி, மதுரை மாவட்ட காவல் எல்லைக்குள்பட்ட வாழைத்தோப்பு பகுதியில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

வனத்துறை கடும் கட்டுப்பாடு: சதுரகிரிக்கு வாழைத்தோப்பு வழியாக செல்லும் பக்தா்களுக்கு மதுரை மாவட்ட வனத்துறை சாா்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அப்போது மலையேறும் பக்தா்கள் நெகிழிப் பைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள், ஆயுதங்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை. மேலும் தடை செய்யப்பட்ட பொருள்களை கொண்டு செல்வதை தடுக்கும் வகையில், வாழைத்தோப்பு பகுதியில் பக்தா்களின் உடைமைகளை சோதனையிட வனச்சரகா் காா்த்திக் தலைமையில் எட்டு போ் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மலையேறும் பக்தா்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கம் வகையில் தே. கல்லுப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரா்களும், மருத்துவக் குழுவினரும் வாழைத்தோப்பு பகுதியில் முகாமிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.