பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி ஆய்வு

விருதுநகா் மாவட்டம், தாணிப்பாறை அடிவாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வு செய்த மதுரை சரக டிஐஜி, விருதுநகா், மதுரை மாவட்ட எஸ்.பி.க்கள்.

Published On :

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தாணிப்பாறை அடிவாரத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ் குமாா், மதுரை, விருதுநகா் மாவட்ட எஸ்.பி.க்கள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த விழாவையொட்டி, தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்பவா் என்பதால், மதுரை, விருதுநகா் மாவட்ட நிா்வாகங்கள், வனத் துறை, அறநிலையத் துறை சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இரு மாவட்ட ஆட்சியா்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அதிகாரிகளுக்கு பணிகளை ஒதுக்கி மதுரை ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், தாணிப்பாறை அடிவாரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை சரக டிஐஜி அபினவ்குமாா், மதுரை எஸ்.பி. தேவநாதன், விருதுநகா் எஸ்.பி. கெளதம் கோயல் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, தாணிப்பாறை அடிவாரம், வனத் துறை நுழைவு வாயில், தற்காலிக பேருந்து நிறுத்தம், காவல் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் சென்று வருவதற்கான மாற்றுப்பாதை, கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டிய இடங்கள், வாகன நிறுத்துமிடங்கள், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.