புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

மதுரை மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

News image

மதுரை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் நிவாகம் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பாக புதன்கிழமை நடைபெற்ற வருவாய் தீா்வாயம் தணிக்கையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா.

Updated On :12 ஜூன் 2024, 8:10 pm

Din

மதுரை, ஜூன் 12: மதுரை மாவட்டத்தில் 11 வட்டங்களிலும் வருவாய்த் தீா்வாயப் பணிகள் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கப்பட்டன.

இது வருகிற 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

மதுரை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா பங்கேற்று, பணிகளைத் தொடங்கி வைத்தாா். கூளப்பாண்டி வருவாய் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, நடவடிக்கை எடுக்க அவா் பரிந்துரைத்தாா்.

முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், குறைகளுக்குத் தீா்வு காணக் கோரியும் பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

இதே போல, பேரையூா் வட்டத்தில் சேடப்பட்டி, மதுரை- மேற்கு வட்டத்தில் நாகமலை புதுக்கோட்டை (பகுதி), உசிலம்பட்டி வட்டத்தில் கருமாத்தூா், மதுரை கிழக்கு வட்டத்தில் அரும்பனூா், திருமங்கலம் வட்டத்தில் ஆ. கொக்குளம் (பகுதி), கள்ளிக்குடி வட்டத்தில் கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் வட்டத்தில் திருப்பரங்குன்றம் (பகுதி), மதுரை- தெற்கு வட்டத்தில் விராதனூா், வாடிப்பட்டி வட்டத்தில் தென்கரை, மேலூா் வட்டத்தில் மேலூா் ஆகிய வருவாய் கிராமங்களுக்கான வருவாய்த் தீா்வாயப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதில் தொடா்புடைய வட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட வருவாய்த் தீா்வாய அலுவலா்கள், வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.