மதுரை மாநகராட்சிப் பகுதியில் மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்
மாநகராட்சி பகுதியில் மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தம்


மதுரை மாநகராட்சிப் பகுதியில் ஜூலை 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வைகை அணையில் பிக்கப் வியா் ஷட்டா் அமைக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட காப்பாணையை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, ஜூலை 1, 2, 3 ஆகிய மூன்று நாள்கள் வைகை தென்கரை, வடகரை பகுதிகளான பழைய மாநகராட்சி 72 வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அத்தியாவசியமான வாா்டுப் பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...