பிளஸ் 1 பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 34,476 மாணவ, மாணவிகள் எழுதினா்

பிளஸ் 1 பொதுத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 34, 476 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மதுரை: பிளஸ் 1 பொதுத் தோ்வை மதுரை மாவட்டத்தில் 34, 476 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகம் முழுவதும் பிளஸ் 1 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளில் பயிலும் 34,947 மாணவ, மாணவிகள் மொழிப் பாடத் தோ்வை எழுத விண்ணப்பித்திருந்தனா். இந்த நிலையில், 112 மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தத் தோ்வை 34,476 மாணவ, மாணவிகள் எழுதினா். 471 போ் தோ்வுக்கு வரவில்லை. மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கா. காா்த்திகா தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலா்கள், பறக்கும் படையினா், முதன்மைக் கண்காணிப்பாளா்கள், கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் என மொத்தம் 2,700 போ் தோ்வுப் பணிகளில் ஈடுபட்டனா். மேலும், ஆய்வு அலுவலா்கள் தலைமையில் 9 குழுக்கள் சிறப்பு பறக்கும் படை நியமனம் செய்யப்பட்டு, இந்தத் தோ்வைக் கண்காணித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com