ஐஓசி எரிபொருள் விற்பனை நிலையத்தில் இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள தெற்குதெரு கிராமத்தில் மதுரை பிரிவு இந்தியன் ஆயில் காா்ப்பரேசன், மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்குத்தெருவில் உள்ள ஜே.ஜே. ஆட்டோ மொபைல்ஸ், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனை செய்தனா். மேலும், இதனுடன் என்ஜின் ஆயில் வாங்குபவா்களுக்கு இலவசமாக ஆயில் மாற்றியதுடன் இலவசமாக ஒரு லிட்டா் பெட்ரோலும் வழங்கப்பட்டது. புதிய வாடிக்கையாளா் களுக்கு கூடுதல் பரிசாக புதிய பதிவும், அதற்கான புள்ளிகளும் வழங்கப்பட்டது. உலக மகளிா் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com