

மதுரையில் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வட மாநில சிறுவன் உயிரிழந்தாா். உத்தரபிரதேச மாநிலம், மிசாபூரைச் சோ்ந்தவா் முனாலால் மகன் கண்ணையா குமாா் (19). இவா் மதுரை காமராஜா் சாலை, லட்சுமிபுரம் 5- ஆவது தெருவில் தங்கியிருந்து பானிபூரி விற்பனை செய்து வருகிறாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது தம்பி சுதாகரும் (14) மதுரை வந்து அவருடன் தங்கியிருந்தாா். கடந்த இரண்டு நாள்களாக சுதாகருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு சுதாகருக்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு சுதாகரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாதகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்

கண்மாயில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு: சுகாதாரத் துறையினா் ஆய்வு
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

