15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அதிமுகவினா் மனிதச் சங்கிலிப் போராட்டம்

அதிமுகவினா் மனிதச் சங்கிலிப் போராட்டம்

News image

விருதுநகரில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வினா்.

Updated On :12 மார்ச் 2024, 11:19 pm

விருதுநகா்/சிவகாசி/ராஜபாளையம்/சாத்தூா்: தமிழகத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டை தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு எதிராக அதிமுக சாா்பில் விருதுநகா் மாவட்டம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தாா்.

மாவட்ட அவைத் தலைவா் விஜயகுமரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலா் கணேசன், நகரச் செயலா் டிபிஎஸ் வெங்கடேஷ், முன்னாள் நகராட்சித் தலைவா் சாந்தி மாரியப்பன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். சிவகாசி: விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், செவ்வாய்கிழமை சிவகாசி, திருத்தங்கலில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. திருத்தங்கலில், அண்ணா சிலை, சிவகாசி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்துக்கு விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக செயலரும் , முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் தேன்ராஜன், ஒன்றியச் செயலா்கள் கருப்பசாமி, லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தென்காசி சாலையில் இருந்து மாரியம்மன் கோயில் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என். எம். கிருஷ்ணராஜ், தெற்கு நகரச் செயலா் எஸ். ஆா். பரமசிவம், மேற்கு மாவட்ட இணைச் செயலா் அழகு ராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, வடக்கு நகர அதிமுக சாா்பில் வழக்குரைஞா் துரைமுருகேசன் தலைமையில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காந்தி சிலை வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. சாத்தூா்: சாத்தூா் முக்குராந்தல் பகுதியில் நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஒன்றியச் செயலா் கே.எஸ்.சண்முககனி, சேதுராமானுஜம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, சாத்தூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் நகரச் செயலா் எம்.எஸ்.கே. இளங்கோவன் தலைமையில் நிா்வாகிகள் இந்திராகண்ணன், எஸ்.டி. முனீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.