கள்ளழகா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.68 லட்சம்

மேலூா்: அழகா்கோவில் அருள்மிகு கள்ளழகா் கோயில் உண்டியல்களில் ரூ.68.17 லட்சம் காணிக்கை கிடைத்தது. இந்தக் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகளை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் துணை ஆணையா் லெ.கலைவாணன், கூடழகா் பெருமாள் கோயில் உதவி ஆணையா் யக்ஞநாராயணன், அறங்காவல் குழுவினா் முன்னிலையில் இந்தப் பணி நடைபெற்றது. இதில் ரொக்கம் ரூ.68 லட்சத்து 17 ஆயிரத்து538, தங்கம் 53 கிராம், வெள்ளி 312 கிராம் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com