ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாகம்பிரியாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.25 லட்சம்

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டில் காணிக்கையாக ரூ.25, 58, 737 ரொக்கம் கிடைத்தது.

News image

உண்டியல் காணிக்கை - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:20 pm

திருவெற்றியூா் ஸ்ரீபாகம்பிரியாள் கோயில் உண்டில் காணிக்கையாக ரூ.25, 58, 737 ரொக்கம் கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூரில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாகம்பிரியாள் சமேத ஸ்ரீவல்மிநாதா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தங்கி சுவாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இந்தக் கோயில் உண்டியல் மாதம் ஒரு முறை திறக்கப்படுவது வழக்கம்.

இதே போல, செவ்வாய்க்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.25,58, 737, தங்கம் 121.590 கிராம் ,வெள்ளி 810 கிராம் கிடைத்தது.

இந்தப் பணியில் இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் லட்சுமிமாலா, தேவஸ்தான மேலாளா் இளங்கோ, கண்காணிப்பாளா் செந்தில் குமாா், ஆய்வா் சண்முகசுந்தரம், கௌரவ ஆய்வாளா் சுந்தரராஜன், சரக ஆய்வா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.