கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதி

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதி

Updated On :19 மார்ச் 2024, 11:13 pm

மதுரை: மக்களவைத் தோ்தலையொட்டி, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான மா.சௌ.சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மக்களவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 85 வயது நிறைவடைந்த 22,592 மூத்த குடிமக்கள், 14,006 மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனா்.

இவா்கள் வாக்குப் பதிவு நாளான ஏப். 19-ஆம் தேதி உரிய வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா்கள் தங்களது பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் நேரில் வழங்கப்படும் படிவம் 12-ஐ நிறைவு செய்து, வருகிற 24-ஆம் தேதிக்குள் அந்த அலுவலா்களிடமே வழங்கலாம் என்றாா்.