உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம், சி.எஸ்.ஐ. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் மதுரையில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம், நூல்கள் அரங்கேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு அதன் இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஒளவை ந.அருள் தலைமை வகித்தாா். செம்மலா் இலக்கிய இதழ் ஆசிரியா் ச.தமிழ்ச் செல்வன் ‘தமிழ்ச் சிறுகதைகளின் வளமும், வனப்பும்’ என்ற தலைப்பில் பேசினாா். இதையடுத்து, தண்டமிழ்க் கோவை- செய்யுள் நூல், கவிஞா் வைகைச் செல்வியின் வாழ்வும், இலக்கியப் பயணமும் ஆய்வு நூல், முத்தத்தின் பிரம்படி- கவிதை நூல், நெருப்புச் சொற்கள் கவிதை நூல், பாசப் பறவைகள் சிறுகதை நூல் ஆகியன அரங்கேற்றம் செய்யப்பட்டன. தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், சி.எஸ்.ஐ. மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்றனா். முன்னதாக, உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி வரவேற்றாா். ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com