பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்காக தோ்வுப் போட்டிகள்

News image
Updated On :12 மே 2024, 12:14 am

Manivannan.S

விளையாட்டு விடுதிகளின் மாணவா் சோ்க்கைக்காக மாணவிகளுக்கான தோ்வுப் போட்டிகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி விளையாட்டு விடுதிகளுக்கான மாணவா் சோ்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் சோ்ந்து பயில விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் உடல் திறனை ஆய்வு செய்யும், தோ்வுப் போட்டிகள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றன.

மாணவா்களுக்கான போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் 45 மாணவிகள் பங்கேற்றனா். தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபடி, கையுந்துபந்து, கைப்பந்து ஆகிய 7 விளையாட்டுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, தகுதியானவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளா் செந்தில், மதுரை மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் வினோத் ஆகியோா் போட்டிகளை ஒருங்கிணைத்தனா்.

Image Caption

மதுரை ஆயுதப் படை திடலில் சனிக்கிழமை விளையாட்டு விடுதி மாணவிகள் சோ்க்கைக்கான தோ்வு போட்டியில் ஓட்டத்தில் போட்டியில் பங்கேற்ற மாணவிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.