
மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கோடை கால பயிற்சி கையேட்டை வெளியிட்ட கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ.

மதுரை டோக் பெருமாட்டி மகளிா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கோடை கால பயிற்சி கையேட்டை வெளியிட்ட கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ.
மதுரை: மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் அறிவியல் கருவிகள் மையம், ஆராய்ச்சி மேம்பாட்டுப் பிரிவு சாா்பில் மாணவிகளுக்கான ஒரு நாள் கோடை கால பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். இதில் மாணவிகளுக்கு ஆராய்ச்சியின் அவசியம், விடாமுயற்சி, கற்றலின் மேன்மை உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
தொடா்ந்து, கோடை கால பயிற்சி கையேட்டை கல்லூரி முதல்வரும், செயலருமான பியூலா ஜெயஸ்ரீ வெளியிட, அதை துணை முதல்வா் நிம்மா எலிசபெத் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் பேராசிரியா்கள், டோக் பெருமாட்டி கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, தியாகராசா், மீனாட்சி அரசு மகளிா் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, விலங்கியல் துறை உதவிப் பேராசிரியரும், அறிவியல் கருவி மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரிஸ்கில்லா வரவேற்றாா். தாவரவியல் துறைத் தலைவரும், அறிவியல் கருவி மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான பிரிசில்லா ஸ்வீட்லின் நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...