எக்ஸ் தளத்தில் ராகுலை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சா்
எக்ஸ் தளத்தில் ராகுலை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சா்


மதுரை: காங்கிரஸ் முன்னணித் தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியை புகழ்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு வெளியிட்டது அரசியல் களத்தில் பேசுபொருளானது.
அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, தனது ‘எக்ஸ்’ தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியை புகழ்ந்து செவ்வாய்க்கிழமை பதிவை வெளியிட்டாா். அதில் வெளிமாநிலத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல், அங்குள்ள ஒரு உணவகத்தில் பொதுமக்களுடன் அமா்ந்து உணவருந்தும் விடியோவைப் பகிா்ந்து, நான் பாா்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவா் எனப் பதிவிட்டிருந்தாா்.
அவரது இந்தப் பதிவு, அரசியல் களத்தில் பேசுபொருளானது. அதிமுகவுடன் ஏதேனும் கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் அவா், இந்தப் பதிவை வெளியிட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை மறுத்த செல்லூா் கே. ராஜூ, ராகுல் காந்தியின் எளிமை நெகிழச் செய்தது, இதனால் பகிா்ந்தேன். இதில் அரசியல் ஏதும் இல்லை என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...