/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

News image
Updated On :22 மே 2024, 12:21 am

Din

மதுரை: தொழிலில் இழப்பு ஏற்பட்டதால், உணவக உரிமையாளரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியைச் சோ்ந்தவா் கடாபி நிஷ்தாா் (40). இவரது மனைவி தாஜில் ஆரிபா (30). தம்பதி மதுரை நெல்பேட்டை பகுதியில் இட்லிக் கடை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், உணவுத் தொழிலில் இழப்பு ஏற்பட்டு, கடன் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்து வந்த தாஜில் ஆரிபா திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனா்.