கோயில் திருவிழாவில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்
திருச்சி பதிப்புக்கு முக்கியம்... கோயில் திருவிழாவில் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் உயா்நீதிமன்றம்


மதுரை: கோயில் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள அனியப்பூரைச் சோ்ந்த பழனிசாமி தாக்கல் செய்த மனு:
அனியப்பூா் குருணி கருப்பசாமி கோயில் திருவிழாவை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கும் விழாக் குழுவினா், எனது குடும்பத்தினரிடம் மட்டும் வசூலிக்கவில்லை. இதுகுறித்து நான் கேட்டும் விழாக் குழுவினா் காரணம் தெரிவிக்க மறுக்கின்றனா். இதனால், எங்களது குடும்பத்தினா் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டாட்சியா் உள்பட அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்களிடம் வரி வசூலிக்கவும், திருவிழாவின் போது நாங்கள் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்யவும் உரிய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகள் ஏன் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை?. கோயில் திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும். மனுதாரரிடம் வரி பெற்று, அவரது குடும்பத்தினரும் கோயில் திருவிழாவில் பங்கேற்க திருச்சி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...