பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 2 பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.


மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 2 பள்ளிகளில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டன.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட கரும்பாலை பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, மானகிரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளிஆகியவற்றில் தலா ரூ. 35 லட்சத்தில் தலா 2 கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றது.
இந்தப் பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, புதிய வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாநகர மேயா் வ. இந்திராணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்தாா்.
துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் சரவணபுவனேஸ்வரி, கல்விக் குழுத் தலைவா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கோபு, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மகேஸ்வரன், பள்ளித் தலைமை ஆசிரியா்கள், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...