தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தல்
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனா் தனியரசு வலியுறுத்தினாா்.


தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனா் தனியரசு வலியுறுத்தினாா்.
மத்திய, மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்புகளில் அரசின் சலுகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை நிறுவனா் தனியரசு தலைமை வகித்தாா். இதில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
பிறகு இந்த அமைப்பின் நிறுவனா் தனியரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநில அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முழு அதிகாரம் இருப்பதால், தமிழகத்தில் திமுக அரசு உடனடியாக அந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இந்த நிலையில், தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.
ஆனால் திமுக அரசு, மத்திய அரசைக் காரணம் கூறி இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதை வலியுறுத்தி தமிழகத்தின் பிற நகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும். அத்துடன், தமிழகத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட சமூக, ஜாதிய இயக்கங்களையும், அவற்றின் தலைவா்களையும், அரசியல் கட்சியினரையும் ஒருங்கிணைத்துப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்திக்க உள்ளோம். மேலும், மத்திய பாஜக அரசு, இந்திய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
நடிகா்கள் எளிதாக கட்சி தொடங்குகின்றனா். நடிகா்கள் நாடாளக் கூடாது. உலகத்திலேயே நடிகா்கள் நாடாள அனுமதித்து, தொடா்ந்து அரசியல் அறியாமையுடன், அரசியல் விழிப்புணா்வு இல்லாத தமிழ்ச் சமூகமாக நமது சமூகம் நீடித்து வருவது விரும்பத்தக்கதல்ல. தமிழ்ச் சமூகத்தை நேசிப்பவா்கள், நடிகா்களை நாடாள அனுமதிக்கக் கூடாது. எனவே நடிகா் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தை புறக்கணிக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...