

தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமப் பகுதி சுகாதார செவிலியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மதுரையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்தக் கூட்டமைப்பின் மதுரை மாவட்டத் தலைவா் சின்னாயி தலைமை வகித்தாா். இணைச் செயலா் கோகிலா, மாவட்டத் துணைத் தலைவா் லாவண்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலத் துணைத் தலைவா் ஆா். பாண்டியம்மாள் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சுகாதார செவிலியா் பதவி உயா்வு வழங்கப்பட்ட பிறகு, மீண்டும் கிராம சுகாதார செவிலியா் பணியைப் பாா்க்க அறிவுறுத்தக் கூடாது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும், களப் பணிகள் அனைத்தையும் கிராமப் பகுதி செவிலியா்களிடம் வழங்குவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மதுரை மாவட்டச் செயலா் மணிகண்டன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!
சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

