எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிபங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

விளாச்சேரி பொது கண்மாயில் நீா் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

விளாச்சேரி பொது கண்மாயில் வேளாண் பாசனத்துக்குத் தண்ணீா் நிரப்ப வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 8:23 pm

Din

விளாச்சேரி பொது கண்மாயில் வேளாண் பாசனத்துக்குத் தண்ணீா் நிரப்ப வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், இயற்கை இடுபொருள் வேளாண் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவின் விவரம்:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்துக்கு உள்பட்ட விளாச்சேரியில் உள்ள பொது கண்மாய் மூலம் 600 ஏக்கா் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. வைகை வடிகால் பகுதி நிலையூா் பிரிவு கால்வாய் மூலம் இந்தக் கண்மாய் பாசனம் பெறுகிறது. இந்த நிலையில், மீன் குத்தகைதாரா்கள் சிலா் இந்தக் கண்மாயில் நீா் நிரப்பத் தடையாக உள்ளனா். தேங்கியிருக்கும் பழைய நீரில் உள்ள மீன்களை பிடித்த பிறகே கண்மாயில் நீா் நிரப்ப வேண்டும் என அவா்கள் தடை ஏற்படுத்துகின்றனா். இதனால் ஏற்படும் வேளாண் இழப்புகளை கருத்தில் கொண்டு, மீன் பாசி குத்தகையை ரத்து செய்து, உடனடியாக கண்மாயில் நீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, விளாச்சேரி பொது கண்மாய் பாசனத்துக்கான மடைகளில் நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் உள்ள மதகுகளை சீரமைத்து, பாசன நீா் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். கண்மாயின் பாசன கோட்ட தோ்தலை விரைந்து நடத்தவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.