இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் பி. வேல்முருகன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், சிறுபான்மையினா் கல்வி நிறுவனத்தின் கீழ் செயல்படும் பள்ளியில் ஒரு மாணவரை மற்றொரு மாணவா் தாக்கினாா். அரசு வழிகாட்டுதல்களை மீறி, விடுமுறை நாளில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்ட போது இந்த நிகழ்வு நடைபெற்றது. இதுதொடா்பாக பள்ளித் தலைமையாசிரியா் உள்ளிட்டோா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கல்வித் துறை அதிகாரிகள் இழப்பீடு வழங்கும்படி பிறப்பித்த உத்தரவு ஏற்புடையதல்ல எனத் தெரிவிக்கப்பட்டது.