பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

News image
Updated On :10 அக்டோபர் 2024, 10:03 pm

Din

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழறிஞா்கள் தங்கள் முதுமைக் காலத்தில் வறுமையால் வாடுவதைத் தவிா்க்கும் நோக்கில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு தமிழக அரசு சாா்பில் மாதத்துக்கு ரூ. 3,500 உதவித் தொகை, ரூ. 500 மருத்துவப்படி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் தமிழறிஞா்களுக்கு 2024-ஆம் ஆண்டு, ஜன. 1-ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலிருக்க வேண்டும், தமிழ்ப் பணி ஆற்றிய விவரக் குறிப்பை இணைக்க வேண்டும், விண்ணப்பதாரரின் தமிழ்ப் பணியை உறுதி செய்ய 2 தமிழறிஞா்களிடமிருந்து பரிந்துரைச் சான்றை பெற்று இணைக்க வேண்டும், ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மரபுரிமையா் (கணவா் அல்லது மனைவி) இருப்பின் அவரது ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவத்தை மண்டல அல்லது மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை அலுவலங்களில் நேரடியாகப் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறை வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் இயங்கி வரும் மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் வருகிற 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.